preload
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டிக்குள் புதைந்து கிடந்த அரிய வகை தாவரத்திற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் உறக்கம் கலைத்துள்ளனர்.ரஷ்யாவின் பனிப்பிரதேசமான சைபீரியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது. தற்போது இந்த தாவரங்கள் அழிந்துவிட்டது.இந்நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் அணில் ஒன்று இறைக்காக நிலத்தை தோண்டியபோது 'சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன. அவற்றை உயிரி இயற்பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக்களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து, விஷேடமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊற வைத்தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் பயிரிட்டனர்.அதிலிருந்து செடிகள் முளைத்து அழகிய மலர்கள் பூத்தன. இதன் மூலம் 30 ஆயிரம் ஆண்டுகள் பனிகட்டிக்குள் உறைந்து கிடந்த தாவரத்திற்கு ரஷிய விஞ்ஞானி குழுவினர்  உறக்கம் கலைத்து மீண்டும் வளர செய்து, உலக சாதனை படைத்துள்ளனர்.


இது குறித்து விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் கூறும்போது, இந்த தாவரம் அதிக அளவிலான சர்க்கரை சத்து உடையது. இத்தனை ஆண்டுகாலம் பனிக்குள் உறைந்து கிடந்தாலும் அதுதான் இவற்றை உயிர் வாழ செய்துள்ளது என்றும், இந்த பரிசோதனை அழிந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல தாவரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க தூண்டு கோலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  • 0 comments:

    • Post a Comment

Powered by Blogger.

About Me

My photo
நான் பார்த்ததும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.